தமிழ் இலக்கியங்களில் இயற்கையும் சுற்றுச்சூழலும்
Abstract
இயற்கை என்பது ஒரு முழுமையான நிμந்தμ இயல்பாகும். மனிதன் இயற்கையைச்சார்ந்து உயிர் வாழ்கின்றான். அவன் வாழ்க்கைத் தேவைகள் அனைத்தையும் இயற்கையிலிருந்து எடுத்துக் கொள்கின்றான். இயற்கை மனிதனின் அங்கம். இயற்கையின் கோலம் காண்போர் கண்ணிலும், மனதிலும் நிலைத்து பழந்தமிழ் இலக்கியங்களில் பμந்துக் காணக் கிடக்கின்றன. மனிதன் தான் வாழும் இருப்பிடத்தையும், சுற்றுப்புறத்தையும் தூ#மையாகப் பேணுகின்ற போது ஆேμாக்கியமான உலகிற்கு வழிகோலுகின்றான். செவ்வியல் இலக்கியங்களாகத் திகழும் சங்க நூல்கள் மக்களின் வாழ்வியலைத் தன்னகத்தே அடக்கியுள்ளன. சங்க கால மக்கள் இயற்கையைப் போற்றிப் பாதுகாத்ததோடு நில்லாமல் பேணும் முறையையும் உலகிற்குக் கற்றுக் கொடுத்துள்ளனர். இன்றைய சூழலில் தொழில் நுட்பத்தில் வளர்ச்சி காரணமாக உலகம் முழுவதும் மாசுபட்டுள்ளது. அம்மாசு வரும் தலைமுறையினருக்கு பெருந்தீங்கை ஏற்படுத்தும் என்ற விழிப்பு நிலையை உணர்த்துவது அவசியமாகிறது. அவ்வகையில்
இயற்கையைப் போற்றிப் பாதுகாக்க வேண்டியது நம் கடமையாகும். அதற்கு நம் பழந்தமிழ் இலக்கியங்கள் இயற்கையை எவ்வாறு போற்றிப் பாடியுள்ளது என்பதையும் நாம் அறிந்துக் கொள்வது அவசியமாகிறது. அவ்வகையில் தமிழ் இலக்கியங்களில் மக்கள் வாழ்ந்த இயற்கைச் சூழலை இனம் காண்பதே இக்கட்டுைரையாகும்.