இலக்கியத்தில் மனிதநேயக்கூறுகள்
Abstract
இலக்கியம் என்பது நமது முன்னோர் வாழ்வியலான அப்போதைய வாழ்க்கைச் சூழல், பண்பாடு, நாகரிகம் போன்றவற்றை நாம் அறிந்துக்கொள்ள உதவும் ஓர் ஊடகம்.
அக்காலத்தில் வாழ்ந்த மக்கள், மக்களின் தேவைகளுக்குத் தகுந்த செயல்களைச் செய்வதே சரியான வழிமுறை என்றும், மாறுபட்டு வாழ்ந்தவர்கள் மாண்பில்லாதவர்கள் என்ற கொள்கையைக் கொண்டிருந்தனர். இதிலிருந்து உயிர்கள் மீதான அவர்களது நேயம் என்பது மனித இயல்பாகவே இருந்ததை நாம் அறிய முடிகிறது. சமூக அமைப்பானது திணை நிலையினைக் கொண்டு பாகுபடுத்தப்பட்டது அகத்தில் வாழ வேண்டிய முறையினையும்,புறத்தில் போர் புரிவதற்கான ஒழுக்க முறைகளையும் வகுத்து மக்களை நல்வழிப்படுத்தினர். ஒத்தக்கருத்துடைய மக்கள் ஒரு கூட்டமாக வாழ்ந்து வந்தனர், அதனை நாம் சமூகம் என்றோம். அச்சமூகத்திற்குள் ஏற்றத்தாழ்வுகள் இல்லை, போட்டி பொறாமைகள் இருந்ததில்லை, எல்லாம் எல்லோருக்கும் என்ற உயர்ந்த பண்பாடு இருந்ததைக்காண முடிகிறது. மனித உயிர்களைப்போலவே பிற உயிரனங்களையும், மரஞ் செடிகொடிகளையும் நேசித்தே வாழ்ந்தனர்.
தனக்கெனவும், நாளை, நமக்கு என கேள்வி மனத்தில் எழுந்ததன் விளைவு, சுயநலத்தால், பேராசை ஏற்பட, மனமானது கெட்டு, தனிமனித ஒழுக்கம் பாதித்ததன் விளைவு மனிதனை மனிதன் நேசிப்பது என்பது தனி ஒரு மனிதனின் பண்பாக மாறிவிட்டது. எப்படியிருந்த நாம் ஏன் இப்படி மாறிப்போனோம் ஏன் இந்த மாற்றம் நிகழ்ந்தது? என்பதே இவ்வாய்வின் சுருக்கம்.
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 2025 பா. அய்யாசாமி, து. கார்த்திகேயன்

This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License.